மையலோடிஸ்பிளாஸ்டிக் நியோபிளாசம்ஸ் / சின்ட்ரோம்ஸ் (MDS)
பாதிப்புக்கு நமக்கு இன்னும் கூடுதல் சிகிச்சை முறைகள் தேவைப்படுகின்றன
MDS மற்றும் இரத்தசோகை உள்ளவர்களுக்கான ஒரு மருத்துவ ஆய்வு பங்கேற்பதற்காக இப்போது நோயாளிகளைச் சேர்த்து வருகிறது.
RENEW ஆய்வு பற்றிய அறிமுகம்
RENEW ஆய்வானது மையலோடிஸ்பிளாஸ்டிக் நியோபிளாசம்ஸ் / சின்ட்ரோம்ஸ் (MDS) உடன் தொடர்புடைய இரத்தசோகை காரணமாக ஏற்படும் இரத்தமாற்றத் தேவையை ஆய்வு மருந்தினால் பாதுகாப்பாகவும் திறம்படவும் குறைக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்கிறது.
ஆய்வு குறைந்தபட்சம் 20 வருகைகளைக் கொண்டுள்ளது, இவற்றில் சிலவற்றை நீங்கள் வீட்டிலிருந்தே நிறைவு செய்யலாம்.
ஆய்வின் போது, உங்களுக்கு 3-இல் 2 பங்கு (67%) செயலில் உள்ள ஆய்வு மருந்தைப் பெறுவதற்கும், 3-இல் 1 பங்கு (33%) மருந்துப்போலியைப் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. மருந்துப்போலி என்பது எந்தவொரு செயலில் உள்ள மருந்துக் கூறுகளையும் கொண்டிராத ஆனால அவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடிய ஒரு செயலற்ற மருந்துப்பொருளாகும்.
இந்த ஆய்வு மருந்து, உங்கள் உடலின் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் திறனில் குறுக்கிடும் இரத்தத்தில் உள்ள ஒரு புரதத்தைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆய்வு தளத்தில், தோலின் கீழ் ஊசி (தோலுக்கு அடியில்) மூலம் சுமார் 4 வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
பின்வரும் தகுதி நிலைகள் இருந்தால், இந்த மருத்துவ ஆய்வில் நீங்கள் பங்கேற்கத் தகுதி பெறலாம்:*
- 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
- மிகவும் குறைந்த, குறைவான அல்லது இடைப்பட்ட இடர்பாடு கொண்ட MDS இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்க வேண்டும்
- இரத்தமாற்றம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய இரத்தசோகை இருக்க வேண்டும்
- MDS-க்காக நீங்கள் பெற்ற ஆரம்ப சிகிச்சையிலிருந்து இனி பலன் கிடைக்காமலிருக்க வேண்டும், அல்லது நிலையான சிகிச்சையிலிருந்து பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படாதிருக்க வேண்டும்
*உங்கள் MDS பாதிப்பிற்காகச் சில குறிப்பிட்ட சிகிச்சைகளை நீங்கள் பெற்றிருந்தால், இதில் பங்கேற்க நீங்கள் தகுதி பெறாமல் போகலாம். கூடுதல் தகுதி வரன்முறைகள் குறித்து ஆய்வுக் குழுவினர் உங்களுடன் கலந்தாலோசிப்பார்கள்.
ஏன் பங்கேற்க வேண்டும்?
நீங்கள் தகுதி பெற்று பங்கேற்க முடிவு செய்தால், நீங்கள் பின்வருவனவற்றைப் பெறுவீர்கள்:
- ஆய்வு மருந்து மற்றும் ஆய்வு தொடர்பான அனைத்துச் சிகிச்சைகளும் கட்டணமின்றி வழங்கப்படும்
- MDS-இல் அனுபவம் வாய்ந்த ஆய்வு மருத்துவர் மற்றும் குழுவினரால் சிறப்புக் கண்காணிப்பு கிடைக்கப்பெறும்
- தேவைப்பட்டால், ஆய்வுத் தள வருகைகளுக்குச் சென்று வருவதற்கான செலவுகளைத் திரும்பப் பெறுவீர்கள்
- MDS பற்றிய மருத்துவ அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
RENEW ஆய்வில் பங்கேற்கும்போது உங்களின் பாதுகாப்பே எங்களின் முதற் முன்னுரிமையாகும். ஆய்வு குறித்து உங்களுக்குச் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருப்பின், ஆய்வு முழுவதும் எந்த நேரத்திலும் இவை பற்றி உங்களுடன் கலந்தாலோசிக்க ஒரு ஆய்வு குழு உறுப்பினர் இருப்பார்.
எந்தவொரு மருத்துவ ஆய்விலும் உங்கள் பங்கேற்பு முற்றிலும் தன்னார்வமானது, மேலும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் நீங்கள் ஆய்வில் பங்கேற்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம். ஆய்வு முழுவதும் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படும்.
MDS மற்றும் இரத்தசோகை பற்றிய அறிமுகம்
மையலோடிஸ்பிளாஸ்டிக் நியோபிளாசம்ஸ்/சின்ட்ரோம்ஸ் (MDS) என்பது ஒரு வகையான இரத்தப் புற்றுநோயாகும்.
MDS பாதித்த எலும்பு மஜ்ஜையால் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்க முடியாதபோது MDS-தொடர்புடைய இரத்தசோகை ஏற்படுகிறது. MDS உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் இரத்தசோகை அல்லது குறைந்த இரத்த சிவப்பணு எண்ணிக்கை இருக்கும், மேலும் அவர்களின் அறிகுறிகளைக் குறைக்க இரத்தமாற்றம் தேவைப்படும். இந்த அறிகுறிகளில் அடங்குபவை:
- அதீத சோர்வு/களைப்பு
- மூச்சு விடுவதில் சிரமம்
- வெளிறிய தோல்
- பசியின்மை
- சீரற்ற/வேகமான இதயத் துடிப்பு
- மார்பு வலி
ஒப்பீட்டுக் குறிப்பு:
உங்களுக்கு அருகிலுள்ள ஆய்வுத் தளத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
அருகிலுள்ள ஆய்வுத் தளத்தை உறுதிப்படுத்த, இருப்பிட முடிவுகளில் பட்டியலிடப்பட்டுள்ள எண்ணை அழைக்கவும். மேலும் தகவலுக்கு ஆய்வுத் தள உறுப்பினருடன் கலந்துரையாடுங்கள். நீங்கள் வழங்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பயணம் மற்றும் செலவு ஈடுசெய்தலுக்கான ஆதரவு வழங்கப்படும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள
இந்த ஆய்வில் பங்கேற்பது குறித்து உங்களிடம் உள்ள சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க இந்தப் பிரிவு உதவும்.
RENEW ஆய்வு பற்றிய அறிமுகம்
RENEW ஆய்வு ஏன் நடத்தப்படுகிறது?
RENEW ஆய்வானது மையலோடிஸ்பிளாஸ்டிக் நியோபிளாசம்ஸ் / சின்ட்ரோம்ஸ் (MDS) உடன் தொடர்புடைய இரத்தசோகை காரணமாக ஏற்படும் இரத்தமாற்றத் தேவையை ஆய்வு மருந்தினால் பாதுகாப்பாகவும் திறம்படவும் குறைக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்கிறது.
ஆய்வு மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
இந்த ஆய்வு மருந்து, உங்கள் உடலின் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் திறனில் குறுக்கிடும் இரத்தத்தில் உள்ள ஒரு புரதத்தைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருத்துவ ஆய்வு எனக்குப் பொருத்தமானதா என்பதை நான் எவ்வாறு முடிவு செய்வது?
நீங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டால், தேவையான சோதனைகள் மற்றும் செயல்முறைகள் உட்பட ஆய்வின் அனைத்து அம்சங்களையும் ஆய்வுக் குழு உங்களுடன் மதிப்பாய்வு செய்யும். நீங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டால், ஆய்வின் நோக்கம், சோதனைகள், செயல்முறைகள், நன்மைகள், ஆபத்துக்கள் மற்றும் சாத்தியமான முன்னெச்சரிக்கைகள் குறித்து விவரிக்கும் தகவலறிந்த ஒப்புதல் படிவம் உங்களுக்கு வழங்கப்படும். ஆய்வில் பங்கேற்பது உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை முடிவு செய்வதற்கும், கேள்விகளைக் கேட்பதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எனக்குக் கூடுதல் கேள்விகள் இருந்தால் நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள ஆய்வு தளத்தைத் தொடர்புகொள்ளவும். ஒரு ஆராய்ச்சி செவிலியர் அல்லது ஒருங்கிணைப்பாளர் கூடுதல் தகவல்களை வழங்க முடியும் மற்றும் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்.
மருந்துப் போலி என்றால் என்ன?
மருந்துப்போலி என்பது எந்தவொரு செயலில் உள்ள மருந்துக் கூறுகளையும் கொண்டிராத ஆனால் அவற்றைப் போலவே தோற்றமளிக்கக்கூடிய ஒரு செயலற்ற மருந்துப்பொருளாகும். மருந்துப்போலியைப் பயன்படுத்துவது, ஆய்வு மருந்தைப் பெற்ற குழுவின் முடிவுகளையும், ஆய்வு மருந்தைப் பெறாத ஆனால் அதே படிநிலைகளையும் அதே அளவிலான பராமரிப்பையும் பெற்ற குழுவின் முடிவுகளையும் ஒப்பிட ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
தனியுரிமை, பங்கேற்பை நிறுத்துதல், செலவுகள் மற்றும் அனுமதி
எனது தனிப்பட்ட தகவல்களுக்கு என்ன நடக்கும்?
ஆய்வுக் குழு உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும், மேலும் சட்டப்படி தேவைப்பட்டாலன்றி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிராது. உங்களை அடையாளம் காண முடியாத வகையில் தகவல்களை அவர்கள் மறைகுறியாக்கம் செய்து சேமித்து வைப்பார்கள். உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படும் விதம்பற்றிய கூடுதல் தகவல்களைத் தகவலறிந்த ஒப்புதல் படிவம் உங்களுக்கு வழங்கும்.
ஆய்வில் சேர்ந்த பிறகு நான் விலக முடியுமா?
பங்கேற்பது தன்னார்வமானது, மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலகிக்கொள்ளலாம். நீங்கள் ஆய்வு முடிவதற்கு முன்கூட்டியே விலக விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன் ஆய்வுக் குழுவிற்குத் தெரிவிக்குமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இறுதி வருகையை நிறைவு செய்வதற்காக குறைந்தபட்சம் கடைசியாக ஒரு முறை மருத்துவமனைக்கு வருகை தரும்படி உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். உங்களின் அனுமதியின்படி, நீங்கள் கடைசி டோஸ் ஆய்வு மருந்தைப் பெற்ற பின் 3 இலிருந்து 5 வருடங்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக் குழுவினர் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
பங்கேற்பதற்கு நான் பணம் செலுத்த வேண்டுமா?
பங்கேற்பதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. மருத்துவ ஆய்வு தொடர்பான அனைத்துச் சோதனைகள், செயல்முறைகள் மற்றும் ஆய்வு மருந்து ஆகியவை கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
பங்கேற்பதற்காக எனக்குப் பணம் வழங்கப்படுமா/பயணச் செலவுகள் திருப்பியளிக்கப்படுமா?
ஆய்வில் பங்கேற்பதற்காக உங்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படாது. நீங்கள் தகுதி பெற்றிருந்தால், ஆய்வு வருகைகளில் பங்கேற்பதற்காக நீங்கள் மேற்கொண்ட செலவுகளைத் திருப்பப் பெறும் செயல்முறை குறித்து ஆய்வுக் குழு தெரிவிக்கும்.
ஒரு மருத்துவ ஆய்வில் பங்கேற்க எனது மருத்துவர் எனக்கு அனுமதி அளிக்க வேண்டுமா?
நீங்கள் பங்கேற்பதற்கு உங்கள் மருத்துவர் அனுமதி அளிக்க வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் அனுமதியுடன், நீங்கள் ஆய்வில் பங்கேற்கத் தொடங்குவதற்கு முன் உங்கள் பங்கேற்பைப் பற்றி கலந்தாலோசிக்க, உங்கள் மருத்துவ வரலாற்றைப் பற்றி கேட்க, உங்கள் முன்னேற்றம் குறித்து உங்கள் மருத்துவரிடம் தகவல்களை வழங்க நீங்களோ அல்லது உங்கள் ஆய்வு மருத்துவரோ உங்களின் தனிப்பட்ட மருத்துவரைத் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவ ஆய்வுகள் பற்றிய அறிமுகம்
மருத்துவ ஆய்வு என்றால் என்ன?
மருத்துவ ஆய்வு என்பது ஆராய்ச்சி ஆய்வு என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு ஆய்வு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து மதிப்பிடும் செயல்முறையாகும். ஆய்வு மருந்தானது, நிலையான சிகிச்சையை விட அல்லது செயலற்ற மருந்துப்போலியை (ஆய்வு மருந்தைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் செயலற்ற கூறுகளைக் கொண்டிருக்கும்) விடச் சிறந்ததா, சமமானதா அல்லது மோசமானதா என்பதை முடிவுகள் காட்டுகின்றன. தகுதிவாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்கள் இந்த ஆய்வுகளை நடத்துகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குப் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் மருத்துவ ஆய்வுகளை முடிப்பதன் மூலம் தான் மருந்துகளை ஆய்வு செய்ய முடியும். வெவ்வேறு நாடுகளில் உள்ள வெவ்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் முழுமையான மதிப்பாய்வுக்குப் பிறகு இந்த ஒப்புதலை வழங்கும். இன்று பயன்பாட்டிலிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மருத்துவப் பரிசோதனைகளின் போது முதலில் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டன.
மருத்துவ ஆய்வில் யார் பங்கேற்கலாம்?
மருத்துவப் பரிசோதனைக்குத் தேவையான அனைத்துத் தகுதி வரன்முறைகளையும் பூர்த்தி செய்யும் பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமனையில் உள்ள ஆய்வுக் குழு உங்கள் மருத்துவ வரலாறு மற்றும் தகுதி வரன்முறைகளுக்கு எதிராகத் தற்போதைய மருத்துவ நிலையை மதிப்பாய்வு செய்யும். ஆய்வில் பங்கேற்க நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் தகுதி பெறுகிறீர்களா இல்லையா என்பதை ஆய்வுக் குழு தீர்மானிப்பதற்கு உதவ உங்கள் மருத்துவப் பதிவுகளிலிருந்து தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
ஆய்வு மருந்து என்றால் என்ன?
ஒரு ஆய்வு மருந்து என்பது பயன்பாட்டிற்காக ஒழுங்குமுறை அல்லது சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத தற்போது பரிசோதிக்கப்பட்டு வரும் ஒரு மருந்தாகும்.
ஒப்பீட்டுக் குறிப்பு:
1. Platzbecker U, Fenaux P, Adès L, et al. Proposals for revised IWG 2018 hematological response criteria in patients with MDS included in clinical trials. Blood. 2019;133(10):1020-1030. doi:10.1182/blood-2018-06-857102